இராதபுரம் ஜூன் 20 : இராதபுரம் அருகே உதயத்தூர் கீழூர் கிராம மக்கள் நேற்று யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பின்னர் அவர்கள் யூனியன் ஆணையாளர் செல்வராஜிடம் கோரிக்கை மனு வழங்கினர் அதில் தங்களது பகுதியில் புதிய மேல் நீர்தேக்கத்தொட்டி அமைத்து, சீராக குடிநீர் வழங்க வேண்டும் அங்கன்வாடி அருகில் உள்ள ஆபத்தான கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும். குடியிருப்பு அருகில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது
இதுகுறித்து உறுதி அளித்தார் இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் தொடர்ந்து மாலையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், உதயத்தூர் கீழூர் கிராமத்தில் சென்று ஆய்வு நடத்தினார்.