#உதயத்தூர்_கீழூர்
மனுதாரர் :
A. சுரேஷ்
S/O ஆறுமுகம்
உதயத்தூர் கீழூர்
பொருள் :
நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டம் உதயத்தூர் ஊராட்சி உதயத்தூர் கீழூர் ஆதிதிராவிட சமூக மக்களுக்கான சுடுகாட்டுப் பாதை மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்திட வேண்டி .....
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் உதயத்தூர் ஊராட்சி உதயத்தூர் கீழூர் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்த சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன இப்பகுதி மக்களுக்கு இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு வேண்டி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் போதிய பாதை வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது மழைக்காலங்களில் மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது இடுகாடு அமைந்துள்ள இடத்தில் அடிபம்பு தண்ணீர் வசதி இல்லாததாலும் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்ள வருபவர்கள் இருப்பதற்கு நன்மை கூடம் இல்லாததால் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டியது உள்ளது பல தலைமுறையாக இடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் இன்று வரையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை ஆகவே தாங்கள் தயவுகூர்ந்து இடுகாட்டுக்கு இறந்தவரின் உடலை கொண்டு நல்லடக்கம் செய்வதற்கு தார் சாலை அமைத்தும் தண்ணீர் வசதி மற்றும் நன்மை கூடம் அமைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட பணிவுடன் வேண்டுகிறேன்
இவன் :
........................................
எங்களின் அடிப்படை தேவைகளையும் எங்கள் அடையாளங்களையும் எங்கள் உரிமைகளை பறிக்கும் எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்.