புதுவாழ்வு திட்டத்தின் மிக முக்கிய கோட்பாடு கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்!! நமது நடவடிக்கைகளை பதிவேடுகள் மூலம் பராமரிப்பதால் அனைவரும் அறிய இயலுவதுடன் நமது வருங்கால திட்டங்களை வகுக்கவும் ஏதுவாகும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கீழ்கண்ட ஆவணங்கள் மற்றும் கணக்கு பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
அ. கணக்கு பதிவேடுகள்
1. வரவு ரசீது
2. செலவினச் சீட்டு
3. ரொக்க புத்தகம்
4. பொதுப் பேரேடு
5. சொத்து / இருப்பு பதிவேடு
ஆ. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயல்பாட்டுப் பதிவேடுகள்
6. பயனாளிகள் மற்றும் பங்களிப்பு தொகை பதிவேடு
7. பயிற்சி பதிவேடு
8. தீர்மானப் பதிவேடு
9. இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பதிவேடு
இ. இதர பதிவேடுகள்
10. இலக்கு மக்கள் பதிவேடு
11. கடன் மற்றும் திரும்ப பெறுதல் பதிவேடு
12. சமூக தணிக்கை குழு பதிவேடு
13 காசோலை வழங்குதல் / பெறுதல் பதிவேடு
14. பார்வையாளர்கள் பதிவேடு
15. அலுவலர் பதிவேடு
அ. கணக்கு பதிவேடுகள்
பராமரிக்க வேண்டிய கணக்கு பதிவேடுகள்
1. வரவு ரசீது புத்தகம்
சங்கத்திற்கு வரும் வரவுகளை, வரவு ரசீது புத்தகத்தில் எழுத வேண்டும். சங்கத்திற்கு வரும் தொகைக்கான ஆதாரமே வரவு ரசீது. இந்த ரசீதின் அடிப்படையில்தான் ரொக்கப் புத்தகம் எழுதப்படுகிறது.