மாற்றம் ஏற்படுமா...?


 மத்திய அரசை  எதிர்த்தே நமது போராட்டம் இருந்தா நமது ஊர் ஊராட்சி தாலுகாவை மாவட்டத்தை எதிர்த்து போராட்டம் எப்போது பண்றது


ஊர்ல தண்ணி பிரச்சனை சுடுகாடு பிரச்சனை சாலை பிரச்சனைகள் நிறைய உள்ளது ஆனா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் மத்திய அரசை எதிர்த்தே போராட்டங்கள் உள்ளது அவர்களுக்கு


குடிநீர் பிரச்சனை இடுகாடு பிரச்சனை சாலை பிரச்சினை எல்லாம் ஒரு பிரச்சனையாக தெரிய வில்லையா...?


இங்கு உள்ள MP , MLA  பஞ்சாயத்து தலைவர்  இவர்கள் அவர்கள் பணியை சரியாக செய்தாலே போதுமானது.

 ஐந்து வருடம் ஆட்சியில் இருக்கிறார்கள் நன்றாக அதிகாரத்தையும் பணத்தையும் சம்பாதித்து விடுகிறார்கள் ஐந்து வருடம் முடிந்தவுடன் எனக்கு இன்னொரு தடவை வாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால் நான் உங்களுக்கு  சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தருகிறேன் தண்ணீர் வசதி செய்து தருகிறேன் என்று பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திரும்ப எப்படி ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று நினைக்கிறார்கள் நாமும் ஒவ்வொரு தடவையும் முட்டாள்களாக ஆக்கப்பட்டு வாக்களிக்கிறோம் அவர்களுக்கு அடுத்து தாசில்தார், PDO,VO இவர்கள் பணி என்ன என்பது மக்களுக்கு கடைசிவரை தெரியாமலே போகிறது 

மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதை இரண்டாவது வைத்துக்கொள்ளுங்கள்  முதலில்     இவர்களை எதிர்த்து 

அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினால் நல்ல மாற்றம் உருவாகும்


வளர்ச்சி பாதையில் சென்றாலும் சரி

விடியலை நோக்கி சென்றாலும் சரி 


மாற்றம் மட்டும் ஏற்படாது

- #உதயம்

Post a Comment

Previous Post Next Post