அனைவருக்கும் வணக்கம்
தேசத்தின் முதுகெலும்பு கிராமங்கள் ஆனால் இன்று அந்த முதுகெலும்பு உடைக்க பட்டு குற்றுயிராக சிதிலமடைந்து வாழ்ந்து வருகிறோம்
ஜனநாயகத்தை கட்டி எழுப்ப அஸ்திவாரமாக இருப்பதும்,
ஒரு தேசத்தின் தலை எழுத்தை நிர்ணயிப்பதில் முக்கியமானவர்கள் கிராமத்து மக்களே!
மத்திய அரசானாலும்,மாநில அரசானாலும் , MLA,MP, ஊராட்சிதலைவர்,வார்டு உறுப்பினர் என மக்களுக்காக சேவை செய்ய என உருவாக்கப்பட்ட மக்களாட்சி பிரநிதித்துவத்தை காப்பாற்றி வருவருவது கிராம மக்களே!!
ஆனால் நம்மை வாக்கு வங்கி பிம்பமாக பார்த்து பழகியவர்களை கேள்வி எழுப்பி அவர்களை வேலை வாங்க நாம் மறந்து விட்டோம்
அவர்கள் மக்களுக்கான சேவைசெய்ய உறுதிமொழி ஏற்று வந்தவர்கள்(வேலையாட்கள்)
என்பதை உணர்த்த வேண்டும்
அங்ஙனமே அரசு அதிகாரிகள்
கீழ்மட்ட ஊராட்சி பணியாளர்முதல் உச்சநீதிமன்ற நீதி பதி வரை மக்கள் பணியாளர்களே!!
இதை உணர்ந்து நாம் செயல்பட முயன்றாலே போதும்
அத்தனையும் சாத்தியம்
அரசும் ,அதன் திட்டங்களும்,சட்டங்களும் நாம் வாழ உருவாக்கப்பட்டது அது ஏட்டளவிலும்,பேச்சளவிலும் இருப்பதை செயலாக்க முனைவோம்..
நமக்கான ஜனநாயக கடமையை செய்வோம்
நமக்கான உரிமையை அடைய எல்லா வழிகளிலும் சட்ட திட்டங்களுக்குட்பட்டு கேட்டு பெறுவோம்
அடிப்படை செயலை
உங்கள் ஊர் ஊராட்சிகளிலிருந்து தொடங்குங்கள்
அனைத்திற்கும் செயலாக்க
கிராமத்தின் சட்டசபையாம்
கிராமசபையில் கேள்வியை தொடங்குங்கள்
நமது கிராமத்தின் அத்தனை தேவைகளையும் விவாதிக்க லாம்
நேர அளவு கோல் இல்லை
கிராமத்தின் தேவைகளை பட்டியலிட்டு அதை அரசின் எந்த திட்டம் மூலம் எவ்வளவு நிதி பெற்று எவ்வாறு செயல்படுத்தலாம் என திட்டமிட்டு தீர்மானம் இயற்றி, தொடர் செயலாக எந்த துறைக்கு அனுப்ப படுகிறது என தொடர்ந்து கவனித்து திட்டத்தை கிராமம் வரும்வரை கண்காணித்து பெறலாம்
கிராமத்தின் வளங்களை காக்க தீர்மானம் இயற்றி அதை நடைமுறைப்படுத்தலாம்
ஒரு கிராம ஊராட்சி சிறப்பாக செயல்பட கிராமசபை என்பதை சரியாக செயல்படுத்தினால் அத்தனையும் சாத்தியம்
உங்கள் ஊராட்சியில்
ஊராட்சிக்குட்பட்ட மக்களாக இணைந்து ஓர் ஊராட்சி வளர்ச்சி குழுவை/கூட்டமைப்பு உருவாக்குங்கள் அதன் மூலம் தொடர்ந்து செயல்படுங்கள்
எல்லாம் சாத்தியம்
மாறுவோம் மாற்றுவோம்
நமது கிராமங்கள் நமது அடையாளங்கள்
கிராமசபையை பயன்படுத்தி கிராமங்களை வளமாக்குவோம்
byஉதயம் மலர்
•
0