கிராமசபை சிந்தனைகள்

கிராம சபை என்பது ஒன்றுதான் கிராம வளர்ச்சிக்கும் மக்கள் ஜனநாயகத்திற்கும் அடித்தளம் அதை பயணாக்குவோம் 100நாள் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை செம்மைப்படுத்தி கிராம வளர்ச்சிக்காக பயனாக்குவோம் துடிப்புமிக்க பெண்களே!! இளைஞர்களே!! மகளிர் குழுக்களே!! 100 நாள் வேலையில் நம் கிராம தண்ணீர் தேவைக்கான ஏரி,குளங்களை முறையாக தூர்வாரிபராமரிக்கலாமே... நமது பகுதி ஆற்றின் புதர்களை அகற்றி நீர்வழிப்பாதையை சீரமைத்து மழைநீர் தடையின்றி வர வழி செய்யலாமே!!... அரசின் நலத்திட்டங்களின் வேலைத்தன்மை அறிந்து அதனை சிறப்பாக செய்ய 100நாள்வேலைத்திட்டத்தை கொண்டு பயனாக்கலாம் நமது கிராம எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ,ஒவ்வொன்றையும் ஒருகிராசபைக்கு முன் ஆய்வு செய்துஅந்த கிராம வளர்ச்சி சார்ந்த திட்டங்களை முன்வைத்து திட்டமிடலாம் அனைவரும் கிராமசபையில் இணைந்து கலந்துறையாடி சிந்தித்து நமது கிராமத்திற்கு தேவையான வேலையைசெய்ய கிராமசபையில் வலியுறுத்த வேண்டாமா?? வீணாக பொழுதையும் ,நமது வரிப்பணத்தையும் வீணாக்கலாமா?? வீணாக்க விடலாமா?? நம் பலவீனத்தை பிறர் லாபமாக்க விடலாமா?? சிந்திப்போம்!! நாளைய தலைமுறைக்காக!! சில மணி நேரம் கிராம நலனுக்காக ஒதுக்குங்கள்!! திட்டமிடுங்கள் கிராம நலன்சார்ந்த வளர்ச்சிக்காக... உங்கள் உள்ளாட்சி பிரதிநிகளுடன் கிராமசபையில்.... ஜனவரி26,மே1,ஆகஸ்ட்15,அக்டோபர்2 _நமதுகிராமம் நமது அடையாளம்_

Post a Comment

Previous Post Next Post